தமிழக சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அவர் தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் ஒரு சில மாநிலங்களில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த பத்து நாட்களில் அவர் 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்கிறார் என்பதும் இதையடுத்து பிரதமர் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.