மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்! - சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு !

J.Durai

ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:49 IST)
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில், திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


 
இதில், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவினர் கலந்து கொண்டனர்

அப்போது பேசிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்:

தமிழக முதல்வர் ஸ்டாலின், பிறந்தநாளில், நாம் அனைவரும் ஒன்றுகூடி எல்லாருக்கும் ஆனவர் திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நான் நெஞ்சார்ந்த வாழ்த்துக் கொண்டிருக்கிறோம்.

உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் வாழ்த்துகிறார்கள். மணிப்பூர் பத்தி எரிகிறது.  அதேபோல, எல்லா மாநிலத்திலும் கலவரங்களை உருவாக்கி ஆதாயம் அடைய வேண்டும் என்று நினைக்கிற மோடி கூட்டம்.

அந்த மோடி கூட்டத்தை, இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும் அதற்காக சபதம் எடுத்துக் கொள்வதற்காக தான் இந்த போட்டோக்களுடைய நோக்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனிதனுடைய உரிமைகளை பறிக்கின்ற பாசிச ஆட்சி பாஜக நடத்துகிறது.

இந்திய நாடு பன்முகம் கொண்ட பல்வேறு சமயங்கள் உள்ளடக்கிய நாடு. இந்த நாட்டை ஒரே நாடு என்று நிலையை சொல்லுகிறார்கள் இந்தியா என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் நான், சொல்வதுதான் சாப்பிட வேண்டும் நான் சொல்வதுதான் நீ கேட்க வேண்டும் என்று ஆண்டார் அடிமை தனத்தை இன்றைக்கு வளர்க்க பார்க்கிற பாசிச கூட்டத்தை அடியோடு வேரறுக்க வேண்டும்.

அதுதான் நாம் எடுத்துக்கொள்ளுகிற சபதமாக இந்த கூட்டத்தின் வாயிலாக எடுத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் சமுதாயத்தின் பெரியோர்களே உங்களை பார்த்து நான் கேட்டுக் கொள்கிறேன். நெருக்கடிகள் வந்தாலும்,அந்த நேரத்தில் தான் நாம் சிந்தித்து செயல்பட கூடியவர்களாக இருக்க வேண்டும்

சமுதாயத்தின் பெரியோர்கள் சொல்வார்கள் என்று அந்த பொறுமையை கட்டி காக்கின்ற காரணத்தினால் தான் தமிழகத்தில் நாம் அமைதியோடு சாந்தியும் சமாதானத்தோடு இன்றைக்கு இருக்கிறோம்.

நம்முடைய உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது நம் சொத்துக்கள் பாதகாக்கப்படுகிறது நம்முடைய வழி முறைகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம் அது இல்லாத காரணத்தினால் தான் மற்ற மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் மிருகத்தன்மையோடு நடக்கின்ற நிலை அங்கே உருவாகி இருக்கிறது. இன்றைக்கு இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறார்.

அந்த இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் இருக்கின்ற புதுவை உள்ளடங்கிய 40 தொகுதிகளிலும் நாம் அனைவரும் அமோக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பம் அதுதான் எல்லாம் வல்ல இறைவனுடைய அந்த நம்முடைய எண்ணங்களை ஈடுவை செய்வார் என்று அனைவருடைய விருப்பத்தை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே நேரத்தில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார் தமிழகத்திற்கு வருகை தந்த நேரத்தில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலுக்கு பின்பு பார்த்தால் கூட கிடைக்காது காணாமல் போய்விடும் என்று சொல்லுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாறு அவருக்கு தெரியாது.

அவர், பாசிச கூட்ட த்தில் ஒரு மனிதனுடைய சுயமரியாதை தன்மானம் அறிவு ஆற்றல் சிந்திக்கின்ற நிலை அறியாத கூட்டத்தில் அவர் சிக்கு தவிக்கின்ற காரணத்தினால் அதை பேச சொல்வதை இங்கே பேசுகிறார்.

இந்த கூட்டத்தின், வாயிலாக நரேந்திர மோடி அவர்களை பார்த்து நான் சொல்லுகிறேன் திராவிட மாடலுனுடைய ஆட்சியின் நோக்கம் என்ன தெரியுமா  பேரறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞர், பேராசிரியர் முரசொலி மாறன் கட்டி காத்த இயக்கம்

திமுக காணாமல் போய்விடும் என்று சொல்லுபவர்கள் காணாமல் போயிருந்த வரலாற்றை நான் கண்டிருக்கிறேன். அதே நிலை இந்த தேர்தலுக்குப் பிறகு மோடி, நீங்கள் தான் காணாமல் போய் விடுவார்கள் என்று எச்சரிக்கின்றேன்.

மிசாவை பார்த்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் நாங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கொள்கைக்காக லட்சியத்திற்காக உயிரை மாய்த்துக்கொண்டு அதுமட்டுமல்ல தமிழ் மொழிக்காக தமிழ் மொழி வாழ்க என்று இந்தி மொழியை ஒழிக்க உயிரை மாய்த்தகூட்டம் எங்கள் கூட்டம் ஏதோ ஆட்சிக்கு, வரவேண்டும் ஏதோ வந்து காண்ராக்ட் ஒப்பந்தக்காரர்களுக்கு இந்த ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு இல்லை.

இந்தியாவில் இப்போது  இரண்டு விஷயம் தான் ரியல் எஸ்டேட் மாதிரி ஆயிடுச்சு. ரெண்டு பேர் விக்குறாங்க மோடியும் அமித்ஷாவும். இந்திய நாட்டை விற்கிறார்கள்.

இவர்களிடமிருந்து இரண்டு பேர் வாங்குகிறார்கள். ஆதானி, அம்பானி இன்றைக்கு, தளபதி மு க ஸ்டாலினுடைய கொள்கை இந்தியா முழுவதும் கேட்கிறது திராவிட மாடல் ஆட்சி. நான், பல மாநிலங்களுக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள் . பஸ்ல ஏறுனா ஏறாதன்னு சொல்றாங்க எங்க மாநிலத்துல . ஆனா உங்க மாநிலத்துல பஸ் ஏறினா அதுல டிக்கெட் இலவசம்னு சொல்றாங்க என்ன அதிசயம். பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி உங்கள் மாநிலத்தில் அதுமட்டுமல்ல  குடும்பத்தை முன்னின்று நடத்துகின்ற தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம்  ரூபாய் உரிமை தொகை உங்கள் மாநிலத்தில் ஆனால் எங்கள் வீட்டு பெண்கள் வேலைக்கு சென்றால்  கூலி கூட சரியான முறையில் கொடுக்காமல் அடிமைகளாக வைத்திருக்கிறது எங்கள் மாநிலத்தில் என கூறும் நிலை உள்ளது.

இன்றைக்கு பத்தாண்டு காலத்தில் உங்களுடைய நிர்வாக சீர்கேடு உங்களுடைய லட்சணம் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறீர்களா ?

கடந்த 10 ஆண்டுக்கு முன் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்திய பொருளாதாரம் 2.5 மில்லியன் டாலர். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஐந்து மில்லியன் டாலர் உயரும் என கூறினீர்கள் ஆனால் 3 மில்லியன் டாலர் தாண்ட வில்லை.

அமெரிக்காவிலோ 25 மில்லியன் டாலரும் சீனா சீனாவில் 15 மில்லியன் டாலரும் பொருளாதாரம் மதிப்பு உள்ளது.

விவசாயிகள் உழைப்பை அறிந்த காரணத்தினால் தான் திராவிட மாடல் முத்தமிழறிஞர் இலவச மின்சாரம் கொடுத்தார் விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்தார். திராவிட மாடலுடைய தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

இன்றைக்கு டெல்லியில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் வேதனை படுகிறார்கள். டாடா, அதானி அம்பானி, போன்றவர்களுக்கு ரூ 25 லட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறீர்கள். இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த துரோகம் யார் வீட்டு பணம் உங்க அப்பா எங்க மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் கேட்டார்.

விவசாயிகள் போராடுகிறான் விவசாயிகள் போராட்டத்தில் இன்றைக்கு பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை 2000 பேர் தன்னுடைய உயிர் இழந்துள்ளனர்.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு மோடி அதற்கு பொறுப்புச் சொல்ல சொன்னால் மற்ற கதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

அது மட்டுமல்ல மக்களுக்கு தேர்தல் களத்தில் சொன்னார். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்று சொன்னார்.
ஐந்து ஆண்டு காலத்தில் பத்து கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால்,  இன்றைக்கு நிலை வேலையில்லா திண்டாட்டம்.  திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் தொழிற்சாலை உருவாக்கினார். கோயம்புத்தூரில் ஓசூரில் ஏன் எங்களுடைய திண்டிவனம் விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைகிறார்

இந்தியாவில் இருக்கிற முதலீட்டாளர்கள் 2 லட்சம் முதலிட்டார்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று இருக்கிறார்கள் இதான் பொருளாதார கடமைப்பட்டிருக்கிறோம் . இந்த புள்ளி விவரங்களை நீங்கள் பேச வேண்டும் என்பதற்காக கடன் சுமை மன்மோகன் சிங் ஆட்சி இருக்கும்போது, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டு காலமாக இருந்த கடன் அரசை கடன் 56 லட்சம் கோடி 56 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியாவை இன்றைக்கு மோடி அவர்கள் பத்தாண்டு காலத்தில் 172 கோடியாக அந்த கடனை உயர்த்தியிருக்கிறார்கள்.

மூன்று மடங்கு நான்கு மடங்கு 3.30 மடங்கு அந்த கடன் சுமையை உயர்த்தியதுதான் உங்களுடைய சாதனை. மக்களை வஞ்சித்தது தான் உங்களுடைய சாதனை .

10 ஆண்டுகளுக்கு முன் அன்றைக்கு சராசரி மனிதனுடைய கடன் 44 ஆயிரத்து 348 ரூபாய் இன்றைக்கு சராசரி ஒரு மனிதனுடைய தலையில் சுமந்து இருக்கிற கடன் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தமிழகத்தை தலை நிமிர வைப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தாய் வயிற்றிலிருந்து கருத்திலிருந்து கல்லறை வரையிலும் சமூக நீதிக்காக இட ஒதுக்கீடுக்காக கல்வி வேலை வாய்ப்புக்காக சுகாதாரத்துக்காக பல்வேறு தொழில்களை உருவாக்கிய முத்தமிழறிஞர் கலைஞருடைய ஆட்சியின் வளர்ச்சியில் தமிழகம் இன்றைக்கு தலை நிமிர்ந்து நிற்கிறது.

மோடி, நீங்கள் பொறுப்பேற்கின்ற நேரத்தில் இந்தியாவினுடைய வளர்ச்சி மூணாவது இடத்தில் இருந்தது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து இந்தியாவினுடைய நிலை என்றால் இன்றைக்கு 164 வது இடத்தில் இன்றைக்கு நாட்டினுடைய வளர்ச்சி.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு அறிவித்தீர்கள் இதுவரைக்கும் சொன்னதை செய்தீர்களா ? நாங்கள் சொல்வதை செய்தோம். செய்ததை சொன்னோம்.

சொல்லாததையும் செய்வோம் என்று தாரக மந்திரத்தில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நாம் இங்கே அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந் நேரத்தில் இப்பேர் பட்ட ஒரு பொய்யான வாக்குறுதியை சொல்லி இன்றைக்கு மக்களை நம்ப வைத்து மோசடி செய்திருக்கின்ற மோசடி பேர்வழிதான் மோடி  இந்தியாவினுடைய பிரதமராக இருக்கிறார் என்பதை நாம் உணர்த்த வேண்டும்.

அது மட்டும் அல்ல நான் சார்ந்த துறையை சார்ந்த ஒரு புள்ளிவிபரத்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில்  ஒன்றிய அரசாங்கம் பல்வேறு  ஊழல் செய்திருக்கின்றது.

 மத்திய அரசாங்கத்துடைய குறிப்பு சொல்லுகிறது இதற்கு உங்கள் பதில் என்ன. பத்தாண்டு கால ஆட்சியில் மூலதன செலவு ரூபாய் 16 ஆயிரத்து 732 கோடி ஆனால் நம்முடைய கழக திராவிட மாட ல் ஆட்சியில் மூன்றாண்டு காலத்தில் கழக ஆட்சியில் கடும் நிதிநிலை நெருக்கடியிலும் மூன்று ஆண்டுகளில் மூலதன செலவு ரூபாய் 26 ஆயிரத்து 613 கோடியாக உயர்த்த இருக்கிறோம்.

தமிழக அரசு சாதாரணமாக மக்கள் வரிப்பணத்தை வீண் செலவு செய்யாமல் சிந்தாமல் சிதறாமல் அரசு கஜானாவுக்கு கொண்டு வந்து ஆடம்பர் செலவுகளை தவிர்த்து இந்த பொருளாதாரத்தை இன்றைக்கு மக்களுக்கு வளர்ச்சிக்கு உண்டாக்கி இருக்கிறோம் அது மட்டும் அல்ல தமிழகத்தில் பத்தாண்டு காலத்தில் இருந்த வேளாண்மை நிலையை இன்றைக்கு இங்கு மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் அளவிற்கு சாகுபடி நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி அமைக்க இருக்கிறோம்.

மத்திய அரசாங்கத்திற்கு, தமிழ்நாடு அரசு மூலமாக வழங்கப்பட்ட வரி தொகைகள் ஜிஎஸ்டி உள்பட 8 . 0 4 லட்சம் கோடி ஆனால் , மத்திய அரசாங்கத்தினுடைய நிதி எல்லாம் மாநில அரசாங்கம் செய்வதை போல நான் சொல்லுகிறோம் என்று சொல்லுகிறீர்களே தைரியம் இருந்தால் உங்களுக்கு புள்ளி விபரத்தோடு சொல்லுங்கள் நீங்கள் கொடுக்கின்ற பணத்தை காட்டிலும் மூன்று மடங்கு தொகையை உயர்ந்து தமிழகம் குடிசை இல்லா தமிழகம் மாற்றி அமைக்க வேண்டும் என்று கலைஞருடைய திட்டத்தின் காரணமாக தான் இன்றைக்கு வீடு கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் கொடுக்கின்ற தொகையிலிருந்து மூன்று மடங்கு நான்கு மடங்கு தொகையை உயர்த்தி கொடுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

கலைஞரின் பேரப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார். வெள்ள சேதங்களுக்கு பணம் கொடுக்காமல் இருக்கிறீர்கள்.

 எங்களுடைய பணம் சேர வேண்டிய பணத்தை திருப்பி கொடுங்கள் அது ஒன்றும் மோடி அவர்களே உங்கள் அப்பன் வீட்டு பணமல்ல எங்களுக்கு பணம் தமிழகத்தில் இருக்கின்ற பெரியோர்கள் சிறியவர்கள் முதல் நாங்கள் செலுத்திய வரிப்பணத்தை தான் நாங்கள் திருப்பி கேட்கிறோம்.

முன்பு தேர்தலில் பாஜகவை ஆதரித்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மரண வாக்குமூலம் கொடுக்கிறார்.

நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஆதரவளிப்பதற்காக பிரச்சாரம் செய்வதற்காக நான் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரர் இதுவரை பிரதரமாக ஆனதே கிடையாது. சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரர் இதுவரை பார்த்ததே கிடையாது .

என் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் மரண வாயில் நிற்கிறேன் எனக்கு வயது 93 பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைத்து விட்டேன் இந்த உலகத்தை விட்டு புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். எந்த அளவுக்கு உருக்கமாக முன்பு கூட்டம் இனி மீண்டும் ஆட்சி பிடித்து விடக்கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலும் போராடுவேன் என்று  மரண படுக்கையில் இருக்கின்றவர் இந்த வாக்குமூலம் கொடுக்கிறார்.

என்று சொன்னால் நாம் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் ஒவ்வொருவரும் ஆயிரம் பேருடைய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாதாரண நிலை அல்ல இந்த தேர்தல் ஏதோ நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்காக தேர்தல் அல்ல .

யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதற்காக தீர்மானிக்கின்ற தேர்தல் மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் மோடி என்ற தனிப்பட்ட முறையில் அல்ல பாசிச கூட்டம் பிஜேபி கூட்டம்.

அந்த இந்துத்துவா கூட்டத்தை, இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதை நிலைநாட்டுவதற்காக தான்,
நாம் எங்கே ஒன்று கூடி இருக்கிறோம் ஆதிக்கம் மற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் இந்தி திணைப்பை என்றும் இருப்போம் வறுமையை வெல்லுவோம் வன்முறையை தவிர்ப்போம் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி அந்த தத்துவ த்தின் அடிப்படையில் நாம் அனைவரும் சகோதரர்கள் என்கிற உணர்வோடு ஜனநாயகத்தை பார்ப்போம் இந்தியா கூட்டணி வெல்லட்டும் என பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்