சர்தார் வல்லபாய் படேல் இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர். அவரை போற்றும் வகையில் கடந்த ஆண்டில் குஜராத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. “ஒற்றுமையின் சிலை” என பெயரிடப்பட்டுள்ள அந்த சிலையை காண ஆண்டுதோறும் நாடு முழுவதிலிருந்தும் பலர் வந்து செல்கின்றனர்.
இன்று படேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் நடத்தும் அணிவகுப்பில் பங்கேற்கிறார். பிறகு படேல் சிலையை பார்க்க வரும் பயணிகளுக்கான நீர்வழி விமான போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் படேல் சிலை சுற்றுலாவுக்கான சிறந்த பகுதியாக அமையும் என கூறப்படுகிறது.