மருத்துவர் பட்டங்களை திருப்பி அளிப்போம்: குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:12 IST)
மருத்துவர் பட்டங்களை திருப்பி அளிப்போம் என 2 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் கூட்டாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து பரிசீலனை செய்யாமல் மத்திய அரசு உள்ளது 
 
இதனை கண்டித்து முதுகலை நீட் தேர்வு தேர்வை ஒத்தி வைக்காவிட்டால் தங்கள் மருத்துவ பட்டங்களை திருப்பி அளிக்க உள்ளதாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் கூட்டாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்
 
முதுநிலை நீட் தேர்வுக்கு தயாராக இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளதால் இந்த tஹேர்வு ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்