நீங்கள் டூவீலர் வைத்துள்ளீர்களா? அப்ப இனிமேல் காலை 6 மணிக்கு இதை செக் செய்யுங்கள்

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (22:46 IST)
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி வந்தன. இதில் பெரும்பாலும் விலை உயர்வுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.



 


இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணிக்கு அன்றைய தினத்தின் விலை அறிவிக்கப்படும்

இந்த நிலையில் தினமும் பெட்ரோல் விலையை தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களில் உள்ள எல்.ஈ.டி. திரையில் அன்றைய தினத்தின் விலை மாற்றி அமைக்கப்படும். மேலும் தினசரி விலையை தெரிந்து கொள்ள என்றே இலவச டோல் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ செயலியான Fuel@IOC என்ற செயலியில் தினசரி விலைகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.

அதுமட்டுமின்றி ‘RSP< SPACE >DEALER CODE என்று குறிப்பிட்டு 9224992249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால் பெட்ரோல், டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்,.

 
அடுத்த கட்டுரையில்