சேமிப்பு கணக்குகளில் பணம் எடுக்கும் கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி சற்று தளர்த்தியுள்ளது.
சேமிப்புக் கணக்கு பொறுத்தவரை ஏ.டி.எம்-ல் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 500 மட்டுமே எடுக்க முடியும். அதேபோல், வங்கிக் கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன்பின் ஏ.டி.எம்-ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் அதே பழைய கட்டுப்பாடு தொடர்ந்தது.
தற்போது அந்த கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. சேமிப்புக் கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் எடுக்க முடியும் என்பதை அதிகரித்து ரூ.50 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மார்ச் 13ம் தேதிக்கு பின் சேமிப்புக் கணக்கின் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் எனத் தெரிகிறது.