பாஜகவின் சதித்திட்டமா இந்தியா - பாக் போர்? பிரபலத்தின் சென்ஷேஸ்னல் டாக்

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (20:53 IST)
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் தாக்குதல் நடத்தியது.  
 
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. 
 
இந்த தாக்குதலின் போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் இது போன்ர போர் வரும் என தனக்கு 2 வருடங்களுக்கு முன்னரே தெரியும் என பவன் கல்யாண் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், தெலுங்கு நடிகரும் ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு போர் வந்தாலும் வரும் என்று பாஜக தன்னிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னரே கூறியதாக தெரிவித்தார். மேலும், எந்த ஒரு பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 
 
சந்திரப்பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அலீத்து வந்த அவர், அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகிக்கொண்டு தற்போது ஜனசேனை கட்சியை பலப்படுத்தி வருகிரார். 
 
அதோடு, பவன் கல்யாணை முதல்வராக கொண்டு ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவும் திட்டம் தீ்ட்டி வருவதாக பேச்சும் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்