திகார் சிறை: கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்ட அதே அறையில் ப.சிதம்பரம்

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (08:44 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ காவல் முடிந்த பின்னர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கில் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதம் செய்தார். ஆனால் இதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை விசாரணை காவலுக்கு செய்ய ப.சிதம்பரம் தயார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் 
 
 
இதனை அடுத்து ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள 7ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். இதே அறையில் தான் கடந்த ஆண்டு கார்த்திக் சிதம்பரம் ஒரு வழக்கிற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் அடைக்கப்பட்ட 7ஆம் எண் அறையில்  மேற்கத்திய பாணியிலான கழிப்பறை வசதி உண்டு என்பதும் போதிய காவலர்கள் நிறுத்தப்பட்ட இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
சிறையில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிதம்பரம் எழுந்திருக்க வேண்டும் என்றும் காலை சிற்றுண்டிக்கு பின் அவர் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் அவருக்கு ஒரு மதிய உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ப.சிதம்பரம் தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் சிறையில் உள்ள நூலகத்துக்குச் சென்று தொலைக்காட்சியை பார்க்கலாம் என்றும் இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அவருக்கு இரவு உணவு வழங்கப்படும் என்றும் ஒன்பது மணிக்குள் அவர் தனது சிறை அறைக்குச் செல்ல வேண்டும் என்றும் சிறை விதிகள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்