கர்நாடகாவில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஒரு கிலோ வெங்காயம் 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வட கர்நாடகாவில் உள்ள ஹூப் பள்ளி, விஜாப்புரா, பெலகாவி, பெல்லாரி, ராய்ச்சூரு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெங்காயம் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இந்தாண்டு, 10 மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் நிலத்தில், 23 லட்சம் டன் வெங்காயம் விளைந்துள்ளது. வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் மொத்த விலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள சில்லறை விலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.7 முதல் 10 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் 80 வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.