குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சர் தகவல்..!

Mahendran
திங்கள், 18 நவம்பர் 2024 (15:23 IST)

வர இருக்கும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இயற்றப்படும் என மத்திய அமைச்சர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதா இயற்றப்பட இருப்பதாகவும், இது குறித்த சாத்தியகூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குழு வெளியிட்ட அறிக்கையில் பாராளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் உள்ளது, அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து வர இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்