ஒடிசா ரயில் விபத்து: ரத்த தானம் செய்ய வரிசையில் நிற்கும் உள்ளூர் இளைஞர்கள்..!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (11:12 IST)
ஒரிசாவில் இன்று மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ரயில் விபத்து காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்த சுமார் 300 பேர் பலியாகி உள்ளதாகவும் அதில் சிலர் தமிழர்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் விபத்து நடந்த தகவல் தெரிந்ததும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மீட்டு பணிக்கு உதவி உள்ளனர் என்பதும் மீட்பு படையினர் மற்றும் இயற்கை பேரிடர் படையினர்களுக்கு பெரும் உதவியாக உள்ளூர் இளைஞர்கள் இருந்தனர் என்பதும் கூறப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல பயணிகளுக்கு ரத்தம் தேவைப்படுவது அறிந்ததும் உள்ளூர் இளைஞர்கள் பலர் ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரத்த தானம் செய்வதற்காக இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உதவி செய்துள்ளது அவர்களது மனிதாபிமானத்தை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்