ஒடிஷா ரயில் விபத்து: 7 ரயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம்

வியாழன், 13 ஜூலை 2023 (13:24 IST)
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக இன்று 7 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

ஒடிஷாவில் கடந்த  மாதம் 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  293 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து மனிதத் தவறால் ஏற்பட்டதாகக் கூறி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த ரயில் விபத்து இந்தியாவை உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த  நிலையில்,  சில நாட்களுக்கு முன்பு ரயில்வே மூத்த பொறியாளர்கள்  3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

அருண்குமார்  மஹந்தா, முகம்மது அமீர்கான், பப்பு குமார் ஆகிய மூன்று பேரை ஆதாரங்களை அழித்தல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து, அவர்களை சி.பி.சி காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஒடிஷா  ரயில் விபத்து தொடர்பபாக 7 ரயில்வே ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி தென்கிழக்கு ரயில்வே  பொதுமேலாளர் அனில் குமர் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் இவ்விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும், இவ்விபத்தால் கைது செய்யப்பட்டுள்ள சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட 3 பேர்   உள்ளிட்ட 7  ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது’’ என்று   தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்