ஜெயலலிதா மோடி சந்திப்பு: மீண்டும் கிளம்பும் காவிரி பிரச்சனை

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (13:26 IST)
நேற்று டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்த சந்திப்பு 50 நிமிடம் வரை நீடித்தது.


 
 
பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திய கோரிக்கைகளில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையையும் கூறியிருந்தார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமரை வலியுறுத்தியது குறித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தற்போது காவிரி நதிநீர் பிரச்னை நடுவர் மன்றத்தில் உள்ளது. இதனால், பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்து பேசுவதால் எந்த பயனையும், தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்