உக்ரைனில் இந்திய மாணவர்கள் பயணக்கைதிகளா? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:54 IST)
உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 
 
உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களை பணயக்கைதியாக பிடித்து வைத்து கொண்டு இந்தியாவையும் ரஷ்யாவையும் உக்ரைன் ராணுவம் மிரட்டுகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியானது
 
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் ராணுவம் எந்த ஒரு இந்திய மாணவரையும் பணய கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதாக தங்களுக்கு எந்தவித தகவலும் இல்லை என்றும் இது போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது
 
மேலும் உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை பாதுகாப்பாக நாட்டிலிருந்து அனுப்பி வைத்து கொண்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்