ரயிலில் இனி செல்போன் சார்ஜ் செய்ய முடியாது: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (08:10 IST)
ரயிலில் இனி செல்போன் சார்ஜ் செய்ய முடியாது: ஏன் தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக இரயிலில் செல்போன் சார்ஜ் செய்யும் வகையில் சார்ஜிங் பிளக்பாயிண்ட் வசதி செய்யப்பட்டிருந்ததால் ரயில் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருந்தது பகலிலும் இரவிலும் பயணம் செய்யும் ரயில் பயணிகள் அதில் சார்ஜ் போட்டு தங்கள் செல்போனில் சார்ஜ் நிரப்பிக் கொண்டனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்து குறித்த விசாரணை நடந்தபோது இரவில் விடிய விடிய சார்ஜ் போட்டு விட்டு தூங்கி விட்டதால் அதில் ஏற்படும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது 
 
இதனை அடுத்து இனிமேல் ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜ் செய்யும் பாயிண்டுகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட வேண்டும் என ரயில் பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை செய்துள்ளார் 
 
இதனை அடுத்து இனிமேல் இரவில் செல்போன் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது. ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி மேற்கு ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் பாயிண்டுககளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது இதேபோல் தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வேக்களும் இந்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது 
 
எனவே செல்போனில் சார்ஜ் இல்லாத ரயில் பயணிகள் பகலிலேயே சார்ஜ் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்