மன்னிப்பு கேட்க முடியாது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:08 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சமீபத்தில் உங்கள் வீட்டு நாயாவது நாட்டிற்காக உயிர் இழந்ததா? என்று ஆவேசமாக பேசியதை அடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது.
 
இந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று ராஜஸ்தானில் நடந்த கூட்டமொன்றில் பேசிய போது பாஜகவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். இந்த நாட்டிற்கு நீங்கள் மட்டுமல்ல உங்கள் வீட்டு நாயாவது உயிரிழந்ததா? என்று அவர் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாய் என்ற வார்த்தையை வர் பயன்படுத்தியதையடுத்து அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என இன்று பாராளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் 
 
இது குறித்து பதிலளித்துள்ள அவர் அருகே நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்