பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று பல ஆண்டுகளாக அம்மாநிலத்தின் அரசியல்வாதிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் இயற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெறாத நிலையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆதரவுடன் தற்போது ஆட்சியில் உள்ளது. எனவே ஐக்கிய ஜனதா தளத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஐக்கிய ஜனதாதளம் முக்கிய பங்கு வகிப்பதால் சிறப்பு அந்தஸ்து பெரும் முயற்சியில் நிதீஷ் குமார் தீவிரமாக இருப்பார் என்றும் மத்திய அரசும் அதற்கு ஒப்புக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.