”சக்கரத்துக்கு கீழ் எலுமிச்சம்பழம் வைப்பது நமது கலாச்சாரம்..” நிதியமைச்சர் பதில்

Arun Prasath
சனி, 12 அக்டோபர் 2019 (08:33 IST)
விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைப்பது இந்திய கலாச்சாரம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் ரஃபேல் விமானத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர், பெற்றுக்கொண்டதை அடுத்து அந்த விமானத்தில் “ஓம்” என்று எழுதியும், சக்கரத்தின் கீழ் எலுமிச்சம்பழம் வைத்தும் பூஜை செய்தனர்.

இது குறித்து பலர் கேலியும் விமர்சனமும் செய்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பதில் அளித்துள்ளார்.
அதில், ”சக்கரத்துக்கு கீழ் எலுமிச்சை வைப்பதில் எந்த தவறும் இல்லை, அது உங்களுக்கு மூட நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், அது இந்திய கலாச்சாரத்தை சேர்ந்தது” என கூறியுள்ளார்.


”இதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்த, அவருடைய மனைவியும் கடற்படை கப்பலை தொடங்கி வைத்தபோது அவர்களது மத நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளனர்.இப்போது கேலி செய்பவர்கள், அப்போது எங்கே போனார்கள்?” எனவும் கேள்வி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்