நீட் பயிற்சி மாணவர் திடீர் மாயம்.. தேட வேண்டாம் என மெசேஜ் அனுப்பியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

Mahendran

வெள்ளி, 10 மே 2024 (15:43 IST)
நீட் பயிற்சி மாணவர் திடீரென மாயமானதை எடுத்து என்னை தேட வேண்டாம், நான் தவறான முடிவு எடுக்க மாட்டேன் என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்ற 19 வயது வாலிபர் கடந்த சில நாட்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார் என்பதும் அவர் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மறுநாள் திடீரென அவர் மாயமானார். இதனை அடுத்து அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்த நிலையில் அந்த மாணவர் தனது பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார் 
 
அதில் தனக்கு படிக்க விருப்பமில்லை என்றும் தன்னை ஐந்து வருடங்களுக்கு தேட வேண்டாம் என்றும் தன்னை யாரும் தொடர்பு கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தற்கொலை போன்ற தவறான முடிவை எடுக்க மாட்டேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராஜேந்திர பிரசாத் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்