தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக கணிதப் பாடத்தில் மொத்தம் 20,691 மாணவர்கள் சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.