தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக இன்று நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நீட் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்று நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் மொத்தம் 198 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே நீட் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என்95 மாஸ்க் தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது இந்த மாஸ்க்கை அணிந்துதான் நீட் தேர்வு எழுத வேண்டுமென தேர்வு முகமை அறிவுறுத்தியது
மாணவர்கள் ஹால் டிக்கெட் 50 மில்லி லிட்டர் சானிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி என்றும் ஹால்டிக்கெட் முதல் பக்கத்தில் குறித்த சில அறிவுரைகளை பூர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த விவரங்களை பூர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
மேலும் தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் அறிகுறிகள் இருந்ததா என்பது போன்ற விவரங்களையும் பூர்த்தி செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நீட் தேர்வுக்கு ஒன்றரை மணிக்குப் பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது