நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவு: எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (17:50 IST)
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது
 
 தமிழக அரசு  மட்டுமே இந்த தேர்வை எதிர்த்து வந்தாலும் தமிழக மாணவ மாணவிகளும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாடு முழுவதும் நடைபெற்ற நீட்தேர்வு சற்றுமுன் நிறைவடைந்தது. தமிழ் இந்தி உள்பட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை 10.72 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்
 
நாடு முழுவதும் 497 நகரங்களில் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை  எழுதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்