ஏவியன் ஃபுளூ வைரஸ் பாதிப்பு: மூடப்பட்டது தேசிய விலங்கியல் பூங்கா

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (14:40 IST)
ஏவியன் ஃபுளூ வைரஸ் பாதிப்பால் 9 பறவைகள் உயிரிழந்து உள்ள்து. இதனால், தேசிய விலங்கியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 
டெல்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் திடீரென 9 பறவைகள் உயிரிழந்து கிடந்தன. இதனைக் கண்ட பூங்கா ஆர்வலர்கள், உயிரிழந்த பறவைகளை பரிசோதனை செய்தனர்.
 
இதில் பறவைகளுக்கு H5 ஏவியன் இன்புளூயன்சா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
 
ஏவியன் ஃபுளூ வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து விலங்கியல் பூங்காக்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்