பெங்களூரில் யாஸ்மின் என்ற பெண் அடுத்தடுத்து ஏழு பேரை கல்யாணம் செய்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்த கல்யாண ராணியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு கேஜிஹல்லி பகுதியை சேர்ந்த 38 வயதான யாஸ்மின் என்பவர் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு சாராய் பாளையத்தை சேர்ந்த இம்ரான் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இம்ரான் பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற யாஸ்மின் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு இம்ரான் மறுப்பு தெரிவித்து வந்ததால் இம்ரானிடம் இருந்த பல லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி உள்ளார் யாஸ்மின்.
இதனையடுத்து தலைமறைவான யாஸ்மினை இம்ரான் பல இடங்களில் தேடி கடைசியில் கண்டுபிடித்துள்ளார். அப்போது அவர் பல தொழிலதிபர்கள் உட்பட ஏழு பேரை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.
இதனையடுத்து யாஸ்மினின் முதல் கணவர் இம்ரான் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதில், எனது மனைவி யாஸ்மின் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு பிரிந்து சென்று அவர் அப்சல் சோயிப், சையத் ஷேக், ஈராஜ், ஆசிப் உள்பட 6 பேரை திருமணம் செய்துள்ளார்.
அவர்களிடம் சில ஆபாச புகைப்பட ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். எங்கள் 7 பேரிடமும் பறித்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
மேலும், இது குறித்து கேட்ட என்னை தாக்கி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் அவர். எனவே அவர் மீது கொலை முயற்சி மற்றும் மோசடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும் யாஸ்மினால் பாதிக்கப்பட்ட மற்ற கணவன்களில் அப்சல், சோயிப் ஆகியோரும் போலீசாரிடம் யாஸ்மின் பற்றி புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் யாஸ்மின் பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.