அம்பானி மகனின் அசர வைக்கும் திருமண பத்திரிகை

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:09 IST)
இந்தியாவில் மட்டுமின்றி உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர் முகேஷ் அம்பானி. இந்த கோடீஸ்வரரின் மகன் ஆகாஷ் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் ஆகாஷின் திருமண பத்திரிகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவருடைய ஒரே ஒரு திருமண பத்திரிகையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.1.5 லட்சம். அப்படி என்ன உள்ளது அந்த திருமண பத்திரிகையில்?
 
இந்த திருமண பத்திரிகையே தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. திருமண பத்திரிகை ஒரு சிறிய பெட்டி போன்று இருக்கும் இதனை திறந்து உள்ளே பார்த்தால் கலைநயமும், மிகுந்த மதிப்பும் உடைய ஆபரணங்கள் இருக்குமாம். இதில் ஒரே ஒரு பத்திரிகை நமக்கு கிடைத்தால் நாமும் லட்சாதிபதிதான் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்