வாழ்த்து கூறிய பிரதமருக்கு நன்றி கூறிய ஸ்டாலின்:

ஞாயிறு, 2 மே 2021 (20:35 IST)
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது என்பது தெரிந்ததே 
 
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக அரியணை ஏற உள்ளது என்பதும் மு க ஸ்டாலின் முதல் முறையாக முதல் அமைச்சர் பதவியை ஏற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுடன் ஒத்துழைப்போம் என்றும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை மத்திய அரசு தரும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்