வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி உண்ணாவிரதம்...

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (19:31 IST)
பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருந்தாலும் வழக்கம் போல தனது வேலைகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம், வங்கி கடன் மோசடி, உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அதிமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இதன் காரணமாக பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக தொடங்கப்பட்ட 38 வது ஆண்டு தினத்தை பாஜகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.
 
இது குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் பின்வருமாறு பேசினார். கடந்த 23 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12 ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். 
 
பாராளுமன்ற முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள்  வரும் 12 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் அன்றைய தினம் உண்ணாவிரதம் மேற்கொள்வார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்