இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது… மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

vinoth

வெள்ளி, 27 டிசம்பர் 2024 (07:52 IST)
இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் டெல்லியில் நேற்றிரவு 9.51 மணிக்குக் காலமானார். அவரது மறைவு இந்திய அரசியலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தலைவர்கள் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மன் மோகன் சிங் குறித்து “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்துள்ளது.  எளிய பின்புலத்தில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் இந்திய அரசில் நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டார்.  பொருளாதாரக் கொள்கைகளில் வலுவான முத்திரையைப் பதித்தார். மக்களின் வாழ்வு மேம்பட பல விரிவான முயற்சிகளை செயல்படுத்தினார்” என அவர் நினைவைப் போற்றியுள்ளார்.

1932ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் பாகிஸ்தான் பகுதியில் (தற்போதைய பஞ்சாப்) பிறந்தவர் மன்மோகன் சிங். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலில் முக்கிய பங்கு வகித்த பொருளாதார மேதையான இவர் கடந்த 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார். 32 ஆண்டுகளுக்கு மேல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்