இந்திய பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது அவருக்குப் பலரும் பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுத்து வருகின்றனர். அந்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை கங்கை நதி தூய்மை பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார் மோடி.
இந்நிலையில் அந்த பரிசுப்பொருட்கள் அனைத்தும் தேசிய அருங்காட்சியகத்தில் வைத்து ஏலம் விடப்பட்டன. இந்த பொருட்களின் விலை 300 ரூபாயிலிருந்து 20 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் கிட்டத்தட்ட 2700 க்கும் மேற்பட்ட பரிசுகள் ஏலம் விடப்பட்டன. குறிப்பாக மோடி தனது தாய் ஹீராபெண்ணை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.