தொழில் தொடங்க உகந்த இந்தியா! – மோடியை பாராட்டிய உலக வங்கி!

வியாழன், 24 அக்டோபர் 2019 (13:33 IST)
உலகில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மேலும் 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலை வருடாவருடம் உலக வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 63வது இடத்தை பிடித்துள்ளது.

2014ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 6 ஆண்டுகளில் சரசரவென முன்னேற தொடங்கிய இந்தியா 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 77வது இடத்தை பிடித்தது. தற்போது 2020ம் ஆண்டிற்கான பட்டியலில் மேலும் 14 இடங்கள் தாண்டி 63வது இடத்திற்கு வந்துள்ளது.

பிரதமரின் அந்நிய முதலீட்டு ஈர்ப்பு, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களால்தான் இந்தியா இந்த உயர்வை அடைந்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா முதல் 50 நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்