ஜம்முவில் தொடங்கியது செல்ஃபோன் சேவை..

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:41 IST)
ஜம்மு காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்ஃபபோன் சேவைகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்படலாம் என சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்ஃபோன் மற்றும் இணையதள் சேவைகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது ஜம்முவில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது. தோடா, கிஷ்த்வார், ராம்பன், ரஜோரி, பூஞ்ச் ஆகிய 5 மாவட்டங்களில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு செல்ஃபோன் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பே ரீசி, சம்பா, கது, உத்தம்பூர் ஆகிய பகுதிகளில் செல்ஃபோன் மற்றும் இணையதள சேவைகள் கடந்த 17 ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் காஷ்மீரில், பத்காம், சோனமாக், மணிகம் ஆகிய பகுதிகளில் தொலைப்பேசி இனைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்