ஓட்டு போட எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசியது அம்பலம்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (16:19 IST)
ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட பேரம் பேசியது ஊடகங்களிலும், சமுக வலைதளங்களிலும் அம்பலமானது.


 

 
கர்நாடக மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.க்கள் வாக்காளர்களுக்கு அயிரம், இரண்டாயிரம் என காசு கொடுத்து வாக்குகள் பெற்றது கேள்விபட்ட ஒன்று. அப்படி பணம் கொடுத்து வாங்கிய பதிவியை பயன்படுத்தி கோடி கணக்கில் சம்பாதிக்க திட்டமிட்டது ஊடகங்களில் பரவியுள்ளது.
 
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏ.க்கள் 5 கோடி முதல் 10 கோடி வரை பேரம் பேசிய வீடியோ காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது. ஆம் ஆத்மா கட்சியினர் மற்றும் சமுக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனை வலியுறுத்தி வருகின்றனர்.
 
மேலும் இதுகுறித்து ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவகவுடா கூறியதாவது:-
 
எம்.எல்.ஏ.க்கள் சாதாரணமாக பேசிதானே உள்ளனர், பணம் வாங்கவா செய்தனர். எங்கள் கட்சி மீது அவதூறு ஏற்படுத்தவே இவ்வாறு சதி செய்துள்ளனர், என்றார்.     
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்