சகோதரரின் சடலத்தை வாங்க பணமின்றி அல்லல்பட்ட அமைச்சர்!!

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (12:06 IST)
இறந்து போன சொந்த சகோதரரின் மருத்துவ பில்லை செட்டில் செய்ய முடியாமல், அமைச்சர் டி.வி.சதானந்தகவுடா திணறியுள்ளார்.


 

 
 
உடல் நலக்குறைவால் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு இருந்தார் சதானந்தகவுடாவின் சகோதரர் பாஸ்கர் கவுடா. 
 
தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை பாஸ்கர் கவுடா மரணம் அடைந்தார். தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால், மருத்துவமனை நிர்வாகம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு தெரிவித்து, உடலை தர மறுத்தது.
 
ஆத்திரம் அடைந்த பாஸ்கர் கவுடாவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய ரூ.48 ஆயிரத்தை 'செக்' போட்டு கொடுத்தார் சதானந்தகவுடா. இதையடுத்து பாஸ்கர் கவுடாவின் உடல் மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், "இப்போது பொது மக்களின் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று கூறினார், மத்திய அமைச்சர் சதானந்தகவுடா. 
அடுத்த கட்டுரையில்