மன்மோகன் சிங் உடல்நிலை நிலவரம் என்ன? மருத்துவ வட்டார தகவல்!!

Webdunia
திங்கள், 11 மே 2020 (10:41 IST)
மன்மோகன் சிங்  உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மருத்துவர் நிதிஷ் நாயக் கண்காணிப்பில் மன்மோகன் சிங் உள்ளார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் எல்லாம் அனுமதிக்கப்படவில்லை. சாதாரணமான அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
அவரின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. எனினும், கண்காணிப்பு தேவைப்படுவதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்