பாஜக ஆளாத மாநிலங்களில் பிரதமர் பேசுகையில் வார்த்தைகளை சற்று கவனத்தோடு கையாள்வது சிறந்தது என பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தற்போது ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அவர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் டில்லியில் நேற்று மனிஷ் திவாரி எழுதிய ஆங்கில புத்தகமான ஃபேபிள்ஸ் ஆஃப் ஃப்ராக்சர்ட் டைம்ஸ் என்னும் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 'பாஜக ஆளாத மாநிலங்களில் பிரதமர் பேசுகையில் வார்த்தைகளை சற்று கவனத்தோடு கையாள்வது சிறந்தது என்றும் ஒரு நாட்டின் பிரதமர் தகுதியானவராகவும், நிலையானவராகவும் இருந்து குடிமக்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த சில வருடங்களாகவே அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் மிகவும் தரம் தாழ்ந்துக் கொண்டு வருவதாகவும் குறிப்பாக முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அவ்வாறு பேசுவது வருந்ததக்கது என்றும் கூறினார்.