தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுஷ், வெற்றிமாறனுக்கு கிடைத்த பாராட்டுக்கு இணையாக நாயகி மஞ்சுவாரியருக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
தன்னுடைய காசோலை மற்றும் லெட்டர்பேட் ஆகியவற்றை ஸ்ரீகுமார் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் அவரது தரப்பினர் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதாகவும், அது மட்டுமின்றி தன் உயிருக்கு அவரது தரப்பினரால் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மஞ்சுவாரியர் தனது புகாரில் கூறியுள்ளார் மஞ்சு வாரியரின் இந்த புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது