ஏன் இன்னும் மூலபத்திரத்தை வெளியிட வில்லை? ஸ்டாலினை குடையும் ஹெச்.ராஜா !
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:02 IST)
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத்தயார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சாவால் விடுத்திருந்தார். இந்நிலையில், பாஜக தேசிய செயலர் ராஜா, முரசொலி அலுவலக இடம் சம்பந்தமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் சென்று வருகின்றனர்.
எல்லோரும் இப்படத்தை பார்த்துவரும் நிலையில், சமீபத்தில் தூத்துக்குடிக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் கூறியதாவது:
அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்ககப்பட்ட பஞ்சமி நிலம் என்றார்.
இதையடுத்து இருவரும் டுவிட்டர் பக்கத்தில் ’டுவீட்களில் பஞ்ச்’ வைத்து மோதிக்கொண்டனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
பட்டாவாங்கியிருப்பது 1985 என்றால் முரசொலி ஆரம்பிக்கப்பட்டது 1956 ல். ஸ்டாலின் ஏன் இன்னும் மூலபத்திரத்தை வெளியிட வில்லை?
பஞ்சமி நிலத்தை அபகரிக்கின்ற பாதகர்களின் கட்சி திமுக என்ற கேள்வி எழுகிறது. ஆகவே மூலபத்திரத்தை வெளியிட வேண்டும். அதுக்கு ஏன் இவளோ தயக்கம்??? என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.