நாய் குட்டி மீது ஆசிட் வீசிய வாலிபர்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (15:26 IST)
மும்பையைச் சேர்ந்த 25வயது வாலிபர் நாய் குட்டி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மும்பை அக்ரிபாதாவில் உள்ள குடியிருப்பை சேர்த்த சோபா என்பவர் பிரின்ஸ் என்ற ஒரு நாய் குட்டியை வளர்த்து வந்தார். அவர் எப்போதும் நாய் குட்டியை வெளியே உள்ள கூடாரத்தில் அடைத்துவிட்டு பணிக்கு செல்வார். சம்பவத்தன்று அதேபோல் நாய் குட்டியை வெளியே கூடாரத்தில் அடைத்துவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
 
அப்போது 25 வயதுடைய வாலிபர் ஒருவர் அந்த நாய் குட்டி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் நாய் குட்டி வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டு கூடாரத்தை விட்டு வெளிய வர முயற்சியுள்ளது. சத்தம் கேட்ட பக்கத்து வீட்டார் சோபாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
உடனே சோபாவும் அவரது மகனும் சேர்ந்து நாய் குட்டியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் நாய் குட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து சோபாவின் மகன் அளித்த புகார் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்