மனைவி குழந்தையைக் கொலை செய்து விட்டு போலீஸுக்கு போன் செய்த நபர் - அவர்கள் வருவதற்குள் …?

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (08:34 IST)
உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்த நபர் போலிஸுக்கு தானே போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேதன் துளசியன். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் மேல் தளத்தில் மனைவி மற்றும் குழந்தையோடு வசித்து வந்துள்ளார். கீழ் தளத்தில் அவரின் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் போலிஸாருக்கு போன் செய்த சேதன் தான் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக அவர் வீட்டுக்கு விரைய அங்கு கீழ் தளத்தில் இருந்த அவரது தந்தை இதைக் கேட்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

பின்னர் மேல் தளத்தில் உள்ள வீட்டுக் கதவை உடைத்து பார்த்த போது சேதனும் அவரது மனைவி மற்றும் மகளும் சடலமாகக் கிடந்துள்ளது. போலிஸ் வருவதற்குள் சேதன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைகள் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்