பாஜகவை 100 இடங்களில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:06 IST)
வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜக அதேபோல் இந்த முறையும் வெற்றி பெறலாம் என்று கனவு கண்டு வருகிறது என்றும் ஆனால் அது இந்த முறை நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ்குமார், ஹேமந்த் சோரன், அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் ஒன்றிணைய இருக்கிறார்கள் என்றும் அதனால் பாஜக 100 இடங்களில் கூட வெற்றி பெறுவது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பாஜக அரசு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை பயமுறுத்தி இருக்கிறது என்றும் எத்தனை பேர்களை கைது செய்தாலும் எங்கள் கட்சி பாஜகவிடம் அடிபணியாது என்றும் அவர் தெரிவித்தார்