சீன அதிபர் வருகையால் உலகப்புகழ் பெறும் மாமல்லபுரம்!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (07:07 IST)
சீன அதிபர் நாளை சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தரவுள்ளதால் மாமல்லபுரம் இன்று உலக மீடியாக்களில் தலைப்பு செய்திகளாகி, உலகப்புகழ் பெற்றுள்ளது

ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தால் தலைநகரில் சந்தித்து பேசுவதே வழக்கமான ஒன்றாகும். ஆனால் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருப்பதை அடுத்து சுற்றுலா நகரமான மாமல்லபுரம் இன்று உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது

இந்த நிலையில் மாமல்லபுரம் கடற்பரப்பில் பாதுகாப்புக்கு 2 போர்க்கப்பல்கள் ரோந்து செய்யப்பட்டு வருகிறது. திபெத்தியர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை 22 கிராம மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நகரத்தில் 800 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியையும் போலீசார் செய்து வருகின்றனர்.

சீனா அதிபர் ஸி ஜின்பிங் மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களிலும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் திபெத், அஸ்ஸாம் மற்றும் எல்லை பிரச்சனைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்