வடக்கு அந்தமான் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: புயலாக மாறுமா?

சனி, 22 அக்டோபர் 2022 (11:37 IST)
வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ளது அது புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் நீராதாரங்கள் நிரம்பி வழிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்