டெல்லி பாடகி கொலை வழக்கு… பின்னணியில் காதலன் – போலிஸ் கைது !

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (08:02 IST)
டெல்லியில் தனது வீட்டருகே சுட்டுக் கொல்லப்பட்ட நாட்டுப்புற பாடகி சுஷ்மா கொலை வழக்கின் பின்னணியில் அவரது காதலர் கஜேந்திரா இருப்பதை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்துவந்தவர் பிரபல நாட்டுப்புற பாடகி சுஷ்மா. இவர் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று நாட்டுப்புற பாடல்களை பாடி வருவதால், அந்த பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். இவர் தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதே வீட்டில் இவரது காதலர் கஜேந்திராவும் அவரோடு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தனது வீட்டருகே சில மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார்.

இதையடுத்து இந்த கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலிஸார், சில திடுக்கிடும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். போலிஸின் விசாரணையில் சுஷ்மாவின் கொலைக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் அவரது காதலர் கஜேந்திராதான் என்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி  சுஷ்மாவுக்கும் கஜேந்திராவுக்கும் இடையில் நாட்டுப்புறப்பாடல் மற்றும் சொத்து விஷயங்க்ளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கஜேந்திராவின் எதிர்ப்பை மீறி சுஷ்மா ஊர் ஊராக சென்று நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார். இதனால் கோபமான கஜேந்திரா சுஷ்மாவைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ஒரு முறை முயன்று திட்டம் பலிக்காத போது, இப்போது கூலிப்படையினரை வைத்து சுஷ்மாவை அவரது வீட்டுக்கு அருகேயே கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்