நானும் பிறப்பால் தமிழன்தான்! – உரிமை கொண்டாடும் லண்டன் தொழிலதிபர்!

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (18:20 IST)
தனது மூதாதையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தொழிலதிபர் ரிச்சர்ட் ப்ரான்சன் கூறியிருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை தலைமையகமாக கொண்ட விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் ரிச்சர் ப்ரான்ஸன் இந்தியா வந்துள்ளார். மகாராஷ்டிரா வந்துள்ள அவர் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்திய தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கைகளுக்கு பதிலளித்த ரிச்சர் ப்ரான்சன் பிறப்பால் தான் ஒரு தமிழன் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது “ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எனது உயிரணுவை பரிசோதித்தபோது நான் தமிழர்களோடு ஒன்றுபட்ட டி.என்.ஏவை கொண்டிருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு தமிழரையும் பார்க்கும்போது இவர் நமது உறவுக்காரராக இருக்கலாம் என நினைத்துக் கொள்வேன். என்னுடைய மூதாதையர்கள் 1793ல் தமிழகத்தில் உள்ள கடலூரில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அப்போது எனது மூதாதையரில் ஒருவர் தமிழ்பெண்ணான ஆர்யா என்பவரை மணம் செய்துள்ளார்” என கூறியுள்ளார்.

மேலும் தனது விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தனது கொள்ளுப்பாட்டி ஆர்யாவை குறிக்கும் சின்னம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்