வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வன்முறை நடைபெற்றதை அடுத்து மேகாலயாவில் உள்ள ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன என்பதும் முடிவுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன என்பதில் தெரிந்ததே. இந்த நிலையில் உள்ள மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் என்ற கிராமத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இரு பிரிவினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது
வாக்கு எண்ணிக்கை பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேவையில்லாமல் மூன்று பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.