மாடுகள் வளர்க்க லைசென்ஸ் கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:22 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மாடுகள் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள் எருமை மாடுகள் வளர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்றும் லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் மாடுகள் நகர்ப்புறங்களில் வழிதவறி சுற்றித்திரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் மாடுகள் வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்