ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுக்கும் போலீஸார்..

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (12:07 IST)
கேரளாவில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் போலீஸார்.
கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மேட் போடாத மோட்டார் வாகன ஒட்டிகளை தடுத்தி நிறுத்தி, லட்டுகளை கொடுத்துள்ளனர்.

அதனை வாகன் ஓட்டிகளும் திகைப்புடன் வங்கியுள்ளனர். இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அன்போடு எச்சரிக்கை விடுத்தனர். கேரள போலீஸாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக வலை தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்