தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏவுக்கு சிக்கல்: மீண்டும் பதவியேற்கிறார்!

Webdunia
புதன், 26 மே 2021 (19:10 IST)
தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏவுக்கு சிக்கல்: மீண்டும் பதவியேற்கிறார்!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேவிகுளம் என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராஜா என்பவர் தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்டார் என்பதையும் கேரள சட்டசபை வரலாற்றில் அவர்தான் முதன்முதலில் தமிழில் பதவியேற்ற எம்எல்ஏ என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் எம்எல்ஏ ராஜா கேரள சட்டமன்றத்தில் பதவியேற்றபோது உளமாறா அல்லது கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என்று கூறவேண்டும். அவர் அதனைக் கூற மறந்து விட்டதாக தெரிகிறது.
 
இதனை அடுத்து அவர் மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்று கேரள சபாநாயகர் கூறி இருப்பதாகவும் இதனை ஏற்றுக்கொண்டு அவர் மீண்டும் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல் வெளியானது தேவிகுளம் எம்எல்ஏ ராஜா மீண்டும் பதவி ஏற்கும் போதும் தமிழில்தான் பதவியேற்பார் என்று கூறப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்