ஆளுநரின் அதிகாரம் திடீர் குறைப்பு: சட்டத் திருத்த மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:18 IST)
கேரளாவில் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பதற்கான சட்ட திருத்த மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரம் தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஒரு புதிய துணைவேந்தரை பல்கலைக்கழகத்திற்கு நியமிக்க உரிய அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே இருக்கும் நிலையில் கேரளாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் தேர்வில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது
 
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. கேரள அரசை கலந்து ஆலோசிக்காமல் கேரளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆளுநர் ஆரிப் முகமது கான் சமீபத்தில் நியமனம் செய்ததை அடுத்தே கேரள அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்