மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தைக்கு 107 ஆண்டுகள் சிறை!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (10:17 IST)
அறிவுத்திறன் குறைபாடுள்ள மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்தவருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.


கேரளாவில் உள்ள பத்தனம்திட்டாவில் உள்ள POCSO நீதிமன்றம் தன்னுடன் வசித்து வந்த தனது 13 வயது அறிவுத்திறன் குறைபாடுள்ள மகளை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபருக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த நபரின் மனைவி நீண்ட நாட்களுக்கு முன்னர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில் சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் 2020-ல் நடந்தது, மேலும் சிறுமி தனது அக்கம் பக்கத்தினருடன் பள்ளி ஆசிரியர்களிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு தந்தையால் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அந்த நபர் சிறுமியை பலமுறை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆகஸ்ட் மாதம், இடுக்கி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருத்தரித்த குற்றத்திற்காக 24 வயது இளைஞருக்கு 62 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
 
Edited by: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்